கட்டாய மத மாற்றத்தை தடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்; சுப்ரீம் கோர்ட்டில் மனு

கட்டாய மத மாற்றத்தை தடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என வக்கீல் அஸ்வினி குமார் உபாத்யாய் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார்.
கட்டாய மத மாற்றத்தை தடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்; சுப்ரீம் கோர்ட்டில் மனு
Published on

வக்கீல் அஸ்வினி குமார் உபாத்யாய் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

கண்கட்டி வித்தை, மூடநம்பிக்கை, அச்சுறுத்தி அல்லது பரிசுப்பொருட்கள் அளித்து மத மாற்றம் செய்தல் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக மட்டுமல்லாமல், மதச்சார்பின்மைக்கு எதிராக உள்ளன. இவற்றை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்தத் தவறியுள்ளன. இதுபோன்ற மத மாற்றம் செய்வதில் தனிநபர்களும், தொண்டு நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன.சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் கடந்த 20 ஆண்டுகளில் பெருமளவில் இதுபோன்ற மத மாற்றங்களுக்கு உள்ளாகி உள்ளனர்.

எனவே, பரிசுப்பொருட்கள் அளித்தும், அச்சுறுத்தியும் மத மாற்றம் செய்வதை தடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்க சட்ட ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என அந்த பொதுநல மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com