அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு - கர்நாடக போலீசார் நடவடிக்கை

சனாதனம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பெங்களூரு,

சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் மீது கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டத்தில் உள்ள உப்பள்ளி உபநகர் போலீசில் இந்து அமைப்பினா புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் தமிழக அமைச்சர் உதயநிதி மீது மதம், இனம், மொழி இடையே பகைமையை ஊக்குவித்தல், நல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படுதல், தேசிய ஒருமைப்பாட்டிற்கு பாதகமாக செயல்படுவது, மதம், மத சடங்குகளுக்கு இடையூறு விளைவிப்பது ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com