ராஜினாமாவை எம்.எல்.ஏ.க்கள் தவறாக பயன்படுத்துவதை தடுக்கக்கோரி மனு: தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

தகுதிநீக்க நடவடிக்கையை எதிர்கொள்ளும்போது, ராஜினாமா வழிமுறையை எம்.எல். ஏ.க்கள் தவறாக பயன்படுத்துவதை தடுக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் கமிஷன்
தேர்தல் கமிஷன்
Published on: 

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டில் ஏ.சேது என்பவர் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கட்சி தாவுவதால் தகுதிநீக்க நடவடிக்கையை சந்திக்கும் அல்லது அந்த நடவடிக் கையை சந்திக்க வாய்ப்புள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தகுதிநீக்க மனு மீது சபாநாயகர் முடிவு எடுப்பதற்கு முன்பே வியூகத்துடன் ராஜினாமா செய்து விடுகிறார்கள்.அரசியல் கூட்டணி மாற்றத்துக்கோ அல்லது சட்டசபை, நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை மாற்றி அமைக்கவோ இத்தகைய ராஜினாமா வழிமுறை பயன்படுத்தப்படுகிறது. கட்சி தாவல் தடை சட்டத்தின்கீழ் நடவடிக் கையை தவிர்க்கவும் இப்படி செய்கிறார்கள்.

தானாக முடிவுக்கு வராது

எனவே, தகுதிநீக்க நடவடிக்கையை சந்திக்கும் அல்லது அது உடனடியாக தொடங்க வாய்ப்புள்ள நிலையில், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தா லும், அந்த ராஜினாமா, தகுதிநீக்க நடவடிக்கையை தானாக முடிவுக்கு கொண் டுவராது என்றும், பயனற்றதாக ஆக்கிவிடாது என்றும் அறிவிக்க வேண்டும்.

மேலும், தானாக ராஜினாமா செய்தாரா? ராஜினாமாவின் உண்மைத்தன்மை ஆகியவை பற்றி ஆதாரங்கள் அடிப்படையில் சபாநாயகர் நியாயமான உத்த ரவை பதிவு செய்ய வேண்டும். தகுதிநீக்க மனு மீது சுதந்திரமாக முடிவு எடுக்க வேண்டும்.

தொங்கு சட்டசபை

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை நீட்டிக்கவைக்கும் நோக்கத்தில், தகுதிநீக்க நடவடிக் கையை தவிர்ப்பதற்காக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், ராஜினாமா வழிமுறையை தவ றாக பயன்படுத்துவதை தடுக்க உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும். இதற்காக கட்சி தாவல் தடை சட்டத்தில் விரிவான சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும்.

அத்துடன், ராஜினாமாக்கள் மற்றும் தகுதிநீக்க மனுக்கள் மீது காலவரையறையு டன், நியாயமான, வெளிப்படையான முடிவு எடுக்க உத்தரவிட வேண்டும். தொங்கு சட்டசபை அமைந்தால், சட்டசபைக்கு வெளியே பெறப்படும் ஆதரவு கடிதங்கள் மூலமோ அல்லது போராட்டங்கள் மூலமோ அல்லாமல் சட்டசபை யில் மட்டுமே பெரும்பான்மை நிரூபிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

நோட்டீஸ்

இந்த மனு, தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்குமாறு தேர்தல் கமிஷன், மத்திய சட்ட அமைச்சகம், நாடாளுமன்ற விவகார அமைச்சகம், சட்ட ஆணையம் ஆகியவற்றுக்கு நோட் டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

X