ரீல்ஸ் வீடியோவுக்காக ரெயிலை நிறுத்திய பிளஸ்-2 மாணவர்கள்


ரீல்ஸ் வீடியோவுக்காக ரெயிலை நிறுத்திய பிளஸ்-2 மாணவர்கள்
x

தண்டவாள ஓரமாக 2 பேர் ரெயிலை நோக்கி சிவப்பு விளக்கு காண்பித்தனர்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் எர்ணாகுளம்-புனே இடையே ஓடும் ஓகா எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று அதிகாலை கண்ணூர் அருகே தலைச்சேரி-மாகி இடையேயான தண்டவாள பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு தண்டவாள ஓரமாக 2 பேர் ரெயிலை நோக்கி சிவப்பு விளக்கு காண்பித்தனர்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ரெயில் என்ஜின் டிரைவர் ஏதோ ஆபத்து நிகழ்ந்ததாக கருதி உடனே ரெயிலை நிறுத்தினார். ரெயில் நின்ற பின்னர் என்ஜின் டிரைவர் இறங்கி பார்த்தபோது ரெயிலை நிறுத்திய 2 பேரும் சிறுவர்கள் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரித்த போது செல்போனில் ரில்ஸ் வீடியோ எடுப்பதற்காக ரெயிலை சிவப்பு விளக்கு காட்டி நிறுத்தியதாக தெரிவித்தனர்.

தொடர்ந்து இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் கண்ணூர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் 2 பேரும் 12-ம் வகுப்பு படித்து வருவது தெரியவந்தது. தொடர்ந்து இனிமேல் இதுபோன்ற செயலில் ஈடுபடக்கூடாது என்று போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதற்கிடையே நடுவழியில் ரெயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பரபரப்புக்கு உள்ளானார்கள்.

1 More update

Next Story