

கொல்கத்தா,
மேற்குவங்காளத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கும் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி வரும் 23ம் தேதி 152 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. எஞ்சிய 142 தொகுதிகளுக்கு வரும் 29ம் தேதி 2ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், அம்மாநிலத்தின் புருலியா மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரசாரம் மேற்கொண்டார்.
பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது, ஊடுருவல்காரர்களை ஆதரித்து மேற்கு வங்காளத்தின் மொழி, கலாசாரத்தை மாற்ற திரிணாமுல் காங்கிரஸ் முயற்சிக்கிறது. மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு பழங்குடியினருக்கு எதிராக செயல்படுகிறது. காட்டாச்சிக்கு மம்தா தலைமை தாங்குகிறார்.
திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் சந்தழி மொழியும், பழங்குடியின அடையாளமும் அவமானப்படுத்தப்பட்டது. ஆனால், மதராசா பள்ளிகளுக்கான அதிக அளவிலான பணத்தை திரிணாமுல் காங்கிரஸ் அரசு ஒதுக்கியுள்ள்ளது
என்றார்.