பயங்கரவாதத்தை எதிர்ப்பது குறித்து ஷின் ஜின்பிங் - மோடி விவாதித்தனர் வெளியுறத்துறை செயலர் விஜய் கோகலே பேட்டி

பயங்கரவாதத்தை எதிர்ப்பது குறித்து ஷின் ஜின்பிங் -மோடி விவாதித்தனர் என்று வெளியுறத்துறை செயலர் விஜய் கோகலே கூறியுள்ளார். #VijayGokhale
பயங்கரவாதத்தை எதிர்ப்பது குறித்து ஷின் ஜின்பிங் - மோடி விவாதித்தனர் வெளியுறத்துறை செயலர் விஜய் கோகலே பேட்டி
Published on

பிஜீங்,

பிரதமர் நரேந்திர மோடி, 2 நாள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றுள்ளார். இதற்காக தனி விமானம் மூலம் மோடி சீனா சென்றடைந்தார். சீனா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்பின்னர் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேசினர். பயணத்தின் 2வது நாளான இன்று, ஷின் ஜின்பிங் - மோடி இருவரும் வுஹான் பகுதியில் உள்ள கிழக்கு ஏரி அருகே நடந்தபடி பேசினர்.

இந்தநிலையில், ஷின் ஜின்பிங் - மோடி யின் சந்திப்பு குறித்து சீனாவின் ஊகான் நகரில் வெளியுறத்துறை செயலர் விஜய் கோகலே செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பயங்கரவாதம் உலகளாவிய பிரச்சனையாக உள்ளது. இதனை எதிர்ப்பது குறித்து இரு நாட்டு தலைவர்களும் விவாதித்தனர். தகவல் தொடர்பை வலுப்படுத்துமாறு தங்கள் நாட்டு ராணுவத்திற்கு இரு தலைவர்களும் வழிகாட்டு நெறிமுகளை வழங்குவது என முடிவு செய்துள்ளனர். இந்திய-சீன எல்லைப் பகுதியில் அமைதியைப் பராமரிக்க வேண்டிய தன் முக்கியத்துவம் குறித்து மோடியும் ஜின்பிங்கும் கலந்து ஆலோசித்தனர். இந்தியா-சீனா இடையே வர்த்தகம், ஏற்றுமதி, தொழில் ஒத்துழைப்பு பற்றி பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com