ஒரே தேசம், ஒரே தேர்தலுக்கான சூழ்நிலையை உருவாக்க கூட்டணி கட்சிகளுக்கு பிரதமர் மோடி கோரிக்கை

பாராளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவதற்கான சூழ்நிலையை உருவாக்க பிரதமர் மோடி கோரிக்கை விடுத்து உள்ளார். #OneNationOnePoll #PMModi
ஒரே தேசம், ஒரே தேர்தலுக்கான சூழ்நிலையை உருவாக்க கூட்டணி கட்சிகளுக்கு பிரதமர் மோடி கோரிக்கை
Published on

புதுடெல்லி,

பாராளுமன்றம், மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என கருத்து சமீபகாலமாக எழுந்து வருகிறது. அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து இதற்கு ஒப்புதல் அளித்தால் தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக தேர்தல் கமிஷனும் கூறியிருந்தது. பாராளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடந்த நிதி ஆயோக் ஆதரவு தெரிவித்தது. பாராளுமன்றம், மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு மத்தியில் உள்ள பாரதீய ஜனதாவும் ஆதரவாக உள்ளது.

இந்நிலையில் பாராளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதற்கான சூழ்நிலையை உருவாக்க பிரதமர் மோடி கூட்டணி கட்சிகளுக்கு கோரிக்கை விடுத்து உள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் பிரதமர் மோடி இதனை வலியுறுத்தி உள்ளார் என தெரியவந்து உள்ளது. டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு பாராட்டு தெரிவித்து பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது என தகவல்கள் தெரிவித்து உள்ளன.

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் விவாதத்தை தொடங்கலாம், இதற்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்க உதவிசெய்யலாம் என பிரதமர் மோடி பேசினார் என கூட்டத்தில் கலந்துக்கொண்ட தலைவர் கூறிஉள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com