பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம்; விவசாயிகளுக்கு ரூ.95,000 கோடி இழப்பீடு: மத்திய வேளாண் மந்திரி

பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் மூலம் விவசாயிகளுக்கு ரூ.95 ஆயிரம் கோடி இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது என மத்திய வேளாண் மந்திரி கூறியுள்ளார்.
பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம்; விவசாயிகளுக்கு ரூ.95,000 கோடி இழப்பீடு: மத்திய வேளாண் மந்திரி
Published on

புதுடெல்லி,

புதுடெல்லியில் பயிர் காப்பீடு வார தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் பேசும்போது, ஒவ்வொரு விவசாயிக்கும் பாதுகாப்பு அளிப்பதுதான் பயிர் பாதுகாப்பு திட்டத்தின் நோக்கம். இந்த காப்பீடு திட்டம் மூலம் விவசாயிகள் ரூ.95 ஆயிரம் கோடி இழப்பீடு பெற்றுள்ளனர்.

இந்த திட்டத்தினை அமல்படுத்தியதில் மாநில அரசுகள் மற்றும் காப்பீடு நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. அவர்களின் கடின உழைப்பால், கடந்த 4 ஆண்டுகளில், விவசாயிகள் பயிர் காப்பீடு ப்ரீமியமாக ரூ.17 ஆயிரம் கோடி செலுத்தியுள்ளனர்.

ஆனால் இழப்பீடாக அவர்களுக்கு ரூ.95 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் விரிவுப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் அதிக விவசாயிகள் பலன் அடைவர் என்று அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com