அசாமில் ரூ. 18 ஆயிரத்து 530 கோடிக்கு வளர்ச்சித்திட்ட பணிகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி

பிரதமர் மோடி வடகிழக்கு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அசாமில் ரூ. 18 ஆயிரத்து 530 கோடிக்கு வளர்ச்சித்திட்ட பணிகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி
Published on

கவுகாத்தி,

பிரதமர் மோடி வடகிழக்கு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நேற்று மணிப்பூர் சென்றார். மணிப்பூர் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி இன்று அசாம் சென்றார். அசாம் மாநிலம் கோல்கட் மாவட்டம் சென்ற பிரதமர் மோடி அங்கு நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் 18 ஆயிரத்து 530 கோடி ரூபாய் மதிப்புள்ள முடிவுற்ற மற்றும் புதிய வளர்ச்சிதிட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார். இதில் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள எத்தனால் தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மேலும், புதிய சாலை உள்பட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான வளர்ச்சி திட்டப்பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com