

டெல்லி,
இளைஞர்கள் தங்கள் திறனை தொடர்ந்து வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
48வது உலக திறன் போட்டி சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற உள்ளது. வரும் 22ம் தேதி முதல் 27ம் தேதி வரை இப்போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் உலகின் பல்வேறு நாடுகளை இளைஞர்கள் தங்கள் தொழில் திறன்களை வெளிப்படுத்தி போட்டியிடுகின்றனர். தொழில்நுட்ப கல்வி மற்றும் திறன் மேம்பாட்டை ஊக்குவிப்பதே இப்போட்டியின் முக்கிய நோக்கம் ஆகும்.
இந்நிலையில், இளைஞர்கள் திறனை தொடர்ந்து வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளது. உலக திறன் போட்டியில் கலந்துகொள்ளும் இளைஞருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது,
தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. இளைஞர்கள் புதிய திறன்களை தொடர்ந்து வளர்த்துக்கொள்ள வேண்டும். இளைஞர்கள் வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப தங்களிடம் ஏற்கனவே உள்ள திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். உலக சந்தையின் தேவைக்கு ஏற்ப திறன்களை வளர்த்து நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் தங்கள் அனுபவம், ஆலோசனைகளை வழங்க வேண்டும்
என்றார்.