

டெல்லி,
அசாம் மாநிலம் காசிரங்கா தேசியப்பூங்கா அருகே நிகழ்ந்த கோர சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்தவேதனையைத் தெரிவித்துள்ளார். மேலும், பலி யானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், நிவாரண உதவியாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
அசாம் மாநிலம் கோலாகாட் மாவட்டத்தில் உள்ள காசிரங்கா தேசியப்பூங்கா அருகே நேற்று (வெள்ளிக்கிழமை) மினிபஸ்சும், கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து எக்ஸ் சமூகவலைத்தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், அசாம் மாநிலம் கோலாகாட் மாவட்டத் தில் நடந்த விபத்தில் பலர் உயிரிழந்தது மிகுந்த வேதனையை அளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.2 லட்சமும், படுகாயமடைந்த ஒவ்வொருவருக்கும் தலா ரூ.50,000 வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.