சுதந்திர போராட்ட வீரதீர நிகழ்வுகளை நூல்களாக எழுத இளைஞர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

இளைஞர்கள் தங்கள் பகுதியில் நடந்த சுதந்திர போராட்ட வீரதீர நிகழ்வுகளை நூல்களாக எழுத வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சுதந்திர போராட்ட வீரதீர நிகழ்வுகளை நூல்களாக எழுத இளைஞர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
Published on

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி, மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

அகில இந்திய வானொலி மட்டும் இன்றி தூர்தர்ஷனிலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. மேலும், பிரதமரின் உரையை, நரேந்திர மோடி மொபைல் ஆப் மூலமும் கேட்க முடியும். இந்த மாதத்திற்கான மன் கி பாத் நிகழ்ச்சி, இன்று காலை 11 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது. இதில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

அவர் பேசும்பொழுது, நம்முடைய நாட்டு மக்கள் அனைவருக்கும், குறிப்பிடும்படியாக நம்முடைய இளைய நண்பர்களுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். நீங்கள் நம்முடைய சுதந்திர போராட்ட வீரர்களை பற்றியும், அவர்களுடன் தொடர்புடைய சம்பவங்கள் பற்றியும் எழுதுங்கள்.

இளைஞர்கள் அனைவரும் சுதந்திர போராட்டத்தின்பொழுது, தங்களுடைய பகுதியில் நடந்த வீரதீர நிகழ்வுகளை நூல்களாக எழுத வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.

இந்தியா தனது 75வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட போகிறது. உங்களுடைய எழுத்துகள் சுதந்திர போராட்ட நாயகர்களுக்கு ஒரு தனித்துவம் வாய்ந்த அஞ்சலியாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com