வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய பிரதேச முதல் மந்திரியிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி

மத்திய பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து அந்த மாநிலத்தின் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகானிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய பிரதேச முதல் மந்திரியிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி
Published on

போபால்,

மத்திய பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வரமாக கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் அங்கு நூற்றுக்கணக்கான கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. ஷிவ்பூர் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் பாதுகாப்பு படை வீரர்கள் பத்திரமாக மீட்டுவந்தனர்.

மேலும் அங்குள்ள பல்வேறு கிராமங்களுக்கு மீட்பு படையினர் சென்று அங்குள்ள மக்களை பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கிராமங்களை இணைக்கும் சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து, மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகானிடம், பிரதமர் மோடி காணொலி மூலம் கேட்டறிந்தார். அப்போது பேசிய சிவராஜ் சிங் சவுகான், இதுவரை சுமார் 2 ஆயிரம் பேர் வெள்ளம் பாதித்த இடங்களில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் பிரதமரிடம் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com