இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்த பிரதமர் மோடி

இந்திரா காந்தி, தான் பிரதமராக இருந்த காலத்தில் 11 முறை சுதந்திர தின உரையாற்றியுள்ளார்.
இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்த பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி,

நாடு முழுவதும் சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில், தேசியத் தலைநகர் டெல்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் 12-ஆவது முறையாக பிரதமர் மோடி, தேசியக் கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

இந்தியாவின் வளர்ச்சி, உள்நாட்டு உற்பத்தி, ஜிஎஸ்டி வரி குறைப்பு, விவசாயிகள் நலன் ஆகியவற்றைப் பற்றி பேசினார். அவர் மொத்தமாக 103 நிமிடங்கள் இன்று உரையாற்றினார். இது பிரதமர் மோடியின் நீண்ட உரையாகும். மோடி, கடந்த 2014-ல் 98 நிமிடங்கள் 2016ல் 96 நிமிடங்கள் பேசியிருந்தார். இன்றைய உரையின் மூலமாக பிரதமர் மோடி, அவரது சாதனையையே முறியடித்துள்ளார். (ஒரு மணி நேரம் 43 நிமிடங்கள் ஆகும்)

மேலும் தொடர்ச்சியாக 12 முறை சுதந்திர தின உரையாற்றி இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்துள்ளார். இந்திரா காந்தி, தான் பிரதமராக இருந்த காலத்தில் 11 முறை சுதந்திர தின உரையாற்றியுள்ளார்.

அதிகபட்சமாக இந்தியாவில் 17 முறை நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பெருமை நேருவைச் சேரும். இந்தியா விடுதலை பெற்ற பிறகு முதல் சுதந்திர தினத்தன்று இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேரு 72 நிமிடங்கள் நீண்ட உரையாற்றினார். 2015-ம் ஆண்டு 88 நிமிடங்கள் உரையாற்றி நேருவின் சாதனையை முறியடித்தார் பிரதமர் மோடி.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com