ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடியது பெருமை அளிக்கிறது : பிரதமர் மோடி

ராணுவ வீரர்களின் பங்களிப்பை நினைத்து இந்திய மக்கள் பெருமைப்படுகின்றனர் என்று பிரதமர் மோடி பேசினார்.
ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடியது பெருமை அளிக்கிறது : பிரதமர் மோடி
Published on

ஹர்ஷல்,

பிரதமராக பதவியேற்றது முதல் ஆண்டு தோறும் பிரதமர் மோடி ராணுவ வீரர்களுடன் இணைந்து தீபாவளியைக்கொண்டாடி வருகிறார். 2014-ல் சியாச்சினில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார். 2015 ஆம் ஆண்டு பஞ்சாப்பில், எல்லை கட்டுப்பாடு கோடு அருகே ராணுவ வீரர்களுடன் இணைந்து தீபாவளியை கொண்டாடினார்.

2016-ம் ஆண்டு, இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு சென்ற பிரதமர், சீன எல்லை அருகேயுள்ள கின்னாவுர் மாவட்டத்தில், இந்தோ திபெத்திய எல்லை போலீசார், ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். கடந்த ஆண்டு காஷ்மீரின் வடக்கு பகுதியில் உள்ள குரேஷ் செக்டார் பகுதிக்கு சென்று, ராணுவ வீரர்கள், எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாடினார்.

இந்த நிலையில், இன்று இந்தியா- சீனா எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியைக் கொண்டாடினார். பாதுகாப்பு படை வீரர்களுக்கு இனிப்பையும் பிரதமர் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து ஹர்ஷல் பகுதியில், வி வீரர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்திய விமானப்படையின் சேவைகளை உலக நாடுகள் பாராட்டி வருகிறது.

ராணுவ வீரர்களின் பங்களிப்பால் இந்திய மக்கள் பெருமைப்படுகின்றனர். அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கு தலைவணங்குகிறேன். நமது ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடியது பெருமை அளிக்கிறது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com