ஆக்சிஜன் உற்பத்தியை உடனடியாக அதிகரிக்க அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு

நாடு முழுவதும் ஆக்சிஜன் உற்பத்தியை உடனடியாக அதிகரிக்க அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
ஆக்சிஜன் உற்பத்தியை உடனடியாக அதிகரிக்க அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு
Published on

புதுடெல்லி,

நாட்டில் கரோனா பரவல் அதிகரித்தும் வரும் நிலையில் ஆக்சிஜன் தட்டுப்பாடும் நீடித்து வருகிறது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கரோனா சிகிச்சைக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருவதால் மாநில அரசுகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றன.

இந்நிலையில் நாடு முழுவதும் ஆக்ஸிஜன் விநியோகம் செய்வதற்கும், ஆக்சிஜன் தட்டுப்பாடு மற்றும் விநியோகம் தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டார்.

ஆக்சிஜன் விநியோகத்தை மேம்படுத்த எடுத்த முயற்சிகள் குறித்து பிரதமர் மோடியிடம் உயர்மட்டக்குழு விளக்கம் அளித்தனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தடையின்றி ஆக்சிஜனை விநியோகம் செய்வது மற்றும் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் ஆக்சிஜன் தேவை தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் ஆக்சிஜன் உற்பத்தியை உடனடியாக அதிகரிக்க அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com