

டெல்லி,
ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு நார்வே. இந்நாட்டில் ஜனநாயக ரீதியில் தேர்தல் நடைபெற்று பிரதமர் உள்பட மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அதேவேளை, அந்நாட்டில் மன்னாராட்சி முறையும் நடைமுறையில் உள்ளது. ஆனால், அதிகார நாட்டின் பிரதமர் தலைமையிலான எம்.பி.க்கள் இடமே உள்ளது. அரசர் குடும்பத்திடமிருந்து நாட்டின் முக்கிய விவகாரங்களில் ஆலோசனைகள் , ஒப்புதல்கள் மட்டும் பெறப்படுகின்றன.
இதனிடையே, நார்வே அரசராக 5ம் ஹரால்டு (வயது 89) செயல்பட்டு வந்தார். இவர் ஐரோப்பாவின் மிகவும் வயதான அரசராக இருந்தார்.
இந்நிலையில், 5ம் ஹரால்டு இன்று உயிரிழந்தார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஹரால்டு இன்று உயிரிழந்தார். அதேவேளை, 5ம் ஹரால்டு மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
நார்வே மன்னர் 5ம் ஹரால்டு மறைவால் மிகுந்த கவலையடைந்தேன். இந்த ஆண்டு தொடக்கத்தில் நார்வேக்கு சென்றபோது அவரை சந்தித்ததை அன்புடன் நினைவுகூர்கிறேன். அவரது அன்பான இயல்பும், நாட்டிற்கு ஆற்றிய ஆழ்ந்த சேவையும் என்னை மிகவும் தொட்டது. அரச குடும்பத்தினருக்கும் நார்வே மக்களுக்கும் எனது இதயம் நிறைந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.