இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பிக்கு பிரதமர் மோடி பாராட்டு

உலக மகளிருக்கான ரேபிட் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பிக்கு பிரதமர் மோடி பாராட்டு
Published on

புதுடெல்லி,

அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். இறுதிப்போட்டியில் இந்தோனேசியாவை சேர்ந்த ஐரீன் சுகந்தரை எதிர்கொண்டு விளையாடிய கோனேரு ஹம்பி 8.5 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இவர் பட்டம் வெல்வது இது 2-வது முறையாகும்.

பிடே மகளிர் உலக ராபிட் செஸ் சாம்பியன் பட்டம் வென்ற கோனேரு ஹம்பிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-

2வது முறையாக உலக ரேபிட் செஸ் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார் கோனேரு ஹம்பி. இதன்மூலம் இப்படி ஒரு நம்பமுடியாத, மகத்தான சாதனையை நிகழ்த்திய ஒரே இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். உங்களின் புத்திசாலித்தனம் பலரையும் ஊக்குவிக்கட்டும் என பதிவிட்டுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com