ஈராக் நாட்டின் புதிய பிரதமர் அல்-ஜைதிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஈராக் நாட்டின் புதிய பிரதமர் அல்-ஜைதிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Published on

புதுடெல்லி,

பல மாத அரசியல் இழுபறிக்கு பிறகு, ஈராக் நாட்டின் புதிய பிரதமராக அலி பாலிஹ் காதிம் அல்-ஜைதி பதவியேற்றுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

"ஈராக் நாட்டின் புதிய பிரதமராகப் பதவியேற்ற அலி பாலிஹ் காதிம் அல்-ஜைதிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். ஈராக்குடனான நீண்டகால நட்புறவை இந்தியா பெரிதும் மதிக்கிறது. மேலும், அனைத்துத் துறைகளிலும் நமது இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளது. நமது இரு நாடுகளின் கூட்டு முன்னேற்றம் மற்றும் செழிப்புக்காக இணைந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளேன்.”

இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com