சிலி நாட்டின் புதிய அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

சிலி நாட்டின் புதிய அதிபரின் பணிக்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்
சிலி நாட்டின் புதிய அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Published on

புது டெல்லி,

சிலி நாட்டின் புதிய அதிபராகத் தீவிர வலதுசாரித் தலைவரான ஜோஸ் அன்டோனியோ காஸ்ட் கடந்த 11-ம் தேதி பதவியேற்றார்.

இந்தநிலையில், சிலி நாட்டின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோஸ் அன்டோனியோ காஸ்ட் ரிஸ்ட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

சிலி நாட்டின் அதிபராகப் பொறுப்பேற்றுள்ள ஜோஸ் அன்டோனியோ காஸ்ட் ரிஸ்டுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தியாவிற்கும் சிலிக்கும் இடையிலான அன்பான மற்றும் நட்புறவை மேலும் வலுப்படுத்தவும், வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் எரிசக்தி ஆகியவற்றில் நமது ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும் அவருடன் நெருக்கமாகப் பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன்.அதிபரின் பணிக்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் என அதில் பதிவிட்டுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com