உத்தரகாண்ட் இடைத்தேர்தலில் முதல்-மந்திரி புஷ்கர்சிங் தாமி வெற்றி - பிரதமா மோடி வாழ்த்து

உத்தரகாண்ட் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற முதல்-மந்திரி புஷ்கர்சிங் தாமிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தொவித்தார்.
Image Courtesy: ANI
Image Courtesy: ANI
Published on

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால் அந்த தேர்தலில் முதல்-மந்திரி புஷ்கர்சிங் தாமி தோல்வி அடைந்தார். அவர் மாநில முதல்-மந்திரியாக பதவிஏற்றா.

புஷ்கர் சிங் தாமி முதல்-மந்திரியாக தொடர வேண்டுமானால், அடுத்த 6 மாதத்திற்குள் எதாவது ஒரு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆக வேண்டும். இதனால், அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடும் வகையில் சம்பாவத் தொகுதியில் வெற்றி பெற்றிருந்த கைலாஷ் சந்திர கெஹ்டோரி தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து அந்த தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் புஷ்கர்சிங் தாமி போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சி சாபில் நிர்மலா கஹ்டோரி, சமாஜ்வாதி கட்சி சார்பில் மனோஜ் குமார் பட் ஆகியோர் போட்டியிட்டனர்.

இடைத்தோதலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் புஷ்கர்சிங் தாமி முன்னிலை பெற்றார். மொத்தம் 13 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை முடிவில் சுமா 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் முதல்-மந்தி புஷ்கர்சிங் தாமி வெற்றி பெற்றா. இதன்மூலம் அவா தனது பதவியை தக்க வைத்து கொண்டுள்ளார். புஷ்காசிங் தாமி 57,268 வாக்குகளும், கஹ்டோரி 3,147 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

இந்த நிலையில், இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற புஷ்கர்சிங் தாமிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தொவித்து உள்ளார்.

இதுகுறித்து டுவிட்டால் பதிவிட்ட அவர், சம்பாவத் இடைத்தோதலில் சாதனை வெற்றி பெற்ற உத்தரகாண்டின் ஆற்றல்மிக்க முதல்-மந்திரிக்கு வாழ்த்துகள். உத்தரகாண்ட் மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு அவர் இன்னும் கடினமாக உழைப்பார் என்று நான் நம்புகிறேன். பாஜக மீது நம்பிக்கை வைத்ததற்காக சம்பவத் மக்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு, நமது கட்சியினரின் கடின உழைப்பைப் பாராட்டுகிறேன்' என அவா பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com