பிரதமர் மோடியின் கல்விச் சான்றிதழை வெளியிடக் கோரி கெஜ்ரிவால் மனு: தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு

மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சுனிதா அகர்வால், நீதிபதி டி.என்.ரே ஆகியோர், அந்த மனுவை நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
பிரதமர் மோடியின் கல்விச் சான்றிதழை வெளியிடக் கோரி கெஜ்ரிவால் மனு: தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு
Published on: 

ஆமதாபாத்,

பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு தொடர்பான வழக்கில், அரவிந்த் கெஜ்ரிவாலின் மேல்முறையீட்டை குஜராத் ஐகோர்ட்டு நிராகரித்தது. மேலும் அவர் மீதான ரூ.25,000 அபராதத்தையும் உறுதி செய்தது.

பட்டப்படிப்பு விவரங்கள்

பிரதமர் நரேந்திர மோடியின் கல்வித் தகுதி விவரங்களை வெளியிடக் கோரி, 2016-ம் ஆண்டு ஆம்ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய தகவல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பினார். இதையடுத்து, டெல்லி மற்றும் குஜராத் பல்கலைக்கழகங்கள் மோடியின் பட்டப்படிப்பு விவரங்களை வழங்க வேண்டும் என்று தகவல் ஆணையம் உத்தரவிட்டது.

ரூ.25 ஆயிரம் அபராதம்

இந்த உத்தரவை எதிர்த்து குஜராத் பல்கலைக்கழகம் அந்த மாநில ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி 2023-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதி, தகவல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்தார். கெஜ்ரிவாலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

தள்ளுபடி

இதை எதிர்த்து கெஜ்ரிவால், குஜராத் ஐகோர்ட்டின் இரு நீதிபதிகள் அமர்வில் முறையிட்டார். மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சுனிதா அகர்வால், நீதிபதி டி.என்.ரே ஆகியோர், அந்த மனுவை நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதன்படி மத்திய தகவல் ஆணையத்தின் (CIC) 2016-ஆம் ஆண்டு உத்தரவை ரத்து செய்தும், கெஜ்ரிவால் மீது ரூ.25,000 அபராதம் விதித்தும் பிறப்பிக்கப்பட்ட தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறிய தலைமை நீதிபதி சுனிதா அகர்வால் மற்றும் நீதிபதி டி.என். ரே ஆகியோர் அடங்கிய அமர்வு, அந்த உத்தரவை உறுதி செய்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com