அகமதாபாத்தில் பிரதமர் மோடி-ஜெர்மனி அதிபர் 12-ந்தேதி பேச்சுவார்த்தை

ஜெர்மனி அதிபரின் இந்தியாவிற்கான முதல் பயணம் இதுவாகும்.
அகமதாபாத்தில் பிரதமர் மோடி-ஜெர்மனி அதிபர் 12-ந்தேதி பேச்சுவார்த்தை
Published on

புதுடெல்லி,

பிரதமர் அலுவலகம் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பிரதமர் மோடி அழைப்பின்பேரில் ஜெர்மனிஅதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் வருகிற 12, 13-ந் தேதிகளில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். இது ஜெர்மனி அதிபரின் இந்தியாவிற்கான முதல் அதிகாரப்பூர்வ பயணமாகும்.12-ந்தேதி அகமதாபாத்தில் பிரதமர் மோடி-ஜெர்மனி அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள்.

வர்த்தகம், முதலீடு, தொழில் நுட்பம், கல்வி, திறன் மற்றும் இயக்கம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேலும் தீவிரப்படுத்துவது குறித்தும், பாதுகாப்பு, அறிவியல், புதுமை மற்றும் ஆராய்ச்சி, பசுமை, நிலையான மேம்பாடு, மக்களிடையேயான உறவுகள் போன்ற முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் அவர்கள் விவாதிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஜெர்மனி அதிபரின் இந்தியாவிற்கான முதல் பயணம் இதுவாகும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com