நவராத்திரி தொடக்கம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

File image
நவராத்திரி விழா இன்று தொடங்கியுள்ள நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
நாடு முழுவதும் நவராத்திரி விழா இன்று தொடங்கி வரும் 12ம் தேதி தசராவுடன் நிறைவடைகிறது. இன்று தொடங்கியுள்ள நவராத்திரி விழாவையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நவராத்திரியை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த புனித திருவிழா சக்தி வழிபாட்டிற்கு உகந்ததாகும். இந்த திருவிழா நாட்டின் பல பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது. இந்த புனித நாள் மகிழ்ச்சி, செல்வம் மற்றும் செழிப்பால் நாட்டு மக்கள் அனைவரின் வாழ்விலும் ஒளியூட்டட்டும். நவராத்திரியின் முதல் நாளில் அன்னை ஷைலபுத்ரியை பிரார்த்தனை செய்கிறேன். அவள் அருளால் அனைவரும் ஆசீர்வதிக்கப்படுவார்கள். தேவியின் இந்த பிரார்த்தனை உங்கள் அனைவருக்கும் கிடைக்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார்
Related Tags :
Next Story






