தேசிய வாக்காளர்கள் தினம்; பிரதமர் மோடி பொதுமக்களுக்கு வாழ்த்து

தேசிய வாக்காளர்கள் தினத்தினை முன்னிட்டு பிரதமர் மோடி பொதுமக்களுக்கு இன்று வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். #modi
தேசிய வாக்காளர்கள் தினம்; பிரதமர் மோடி பொதுமக்களுக்கு வாழ்த்து
Published on

புதுடெல்லி,

தேசிய வாக்காளர்கள் தினத்தினை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் வழியே பொதுமக்களுக்கு தனது வாழ்த்துகளை இன்று தெரிவித்து கொண்டார்.

அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கப்பட்ட இந்த நாளில் அதற்கு எனது வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

அவர் மற்றொரு டுவிட்டர் செய்தியில், வாக்களிக்கும் தகுதி பெற்ற அனைத்து வாக்காளர்களும், குறிப்பிடும்படியாக இளைஞர்கள், இந்திய ஜனநாயகத்தினை வலுப்படுத்த தங்களது ஓட்டுகளை பதிவு செய்ய வேண்டும். ஓட்டின் ஆற்றல் மிக உயர்ந்தது என்று தெரிவித்துள்ளார்.

#modi #delhi #PM

X

Daily Thanthi
www.dailythanthi.com