பிஎம் கிசான் திட்டம்: 24வது தவணைத்தொகையை இன்று விடுவிக்கும் பிரதமர் மோடி

பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக இன்று குஜராத் செல்கிறார்.
பிஎம் கிசான் திட்டம்: 24வது தவணைத்தொகையை இன்று விடுவிக்கும் பிரதமர் மோடி
Published on: 

காந்தி நகர்,

விவசாயிகளுக்கான பிஎம் கிசான் திட்டத்தின் 24வது தவணைத்தொகையை பிரதமர் மோடி இன்று விடுவிக்கிறார்.

குஜராத் பயணம்

பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக இன்று குஜராத் செல்கிறார். அவர் அங்கு ரூ. 14 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். இதனை தொடர்ந்து விவசாயிகளுக்கான பிஎம் கிசான் திட்டத்தின் 24வது தவணைத்தொகையையும் பிரதமர் மோடி இன்று விடுவிக்கிறார்.

பிஎம் கிசான் திட்டம்

விவசாயிகளுக்கான பிஎம் கிசான் நிதி திட்டத்தை மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு தொடங்கியது. இந்த திட்டப்படி, சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாய குடும்பங்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 4 மாதத்திற்கு ஒரு முறை தலா ரூ.2000 வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு ரூ.6,000 விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடி பணப்பரிமாற்றம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் இணைந்த விவசாயிகளுக்கு இதுவரை 23 தவணைகளாக 4.47 லட்சம் கோடி ரூபாய் வங்கி கணக்கு மூலம் வழங்கப்பட்டுள்ளது.

24வது தவணைத்தொகை

இந்நிலையில், பிஎம் கிசான் திட்டத்தின் 24வது தவணைத்தொகை நாளை விடுவிக்கப்படுகிறது. குஜராத் மாநிலம் பில்டி நகரில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி பிஎம் கிசான் திட்ட பயனாளர்களான 9 கோடியே 34 லட்சம் விவசாயிகளுக்கு 24வது தவணத்தொகையாக தலா ரு. 2 ஆயிரம் விகிதம் மொத்தம் 18 ஆயிரத்து 680 கோடி ரூபாயை விடுவிக்கிறார்.

குறிப்பாக குஜராத் மாநிலத்தில் மட்டும் பிஎம் கிசான் திட்டத்தில் 52.33 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 1,051 கோடி தவணைத்தொகை விடுவிக்கப்பட உள்ளது.

பிரதமர் மோடியின் குஜராத் பயணத்தின்போது எக்ஸ்பிரஸ் ரெயில் உள்பட 2 ரெயில் சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். அகமதாபாத் மெட்ரோ ரெயில் விரிவாக்கத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

இதனை தொடர்ந்து பயணத்தின் 2வது நாளான நாளை சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு அவர் மரியாதை செலுத்துகிறார். மேலும், வல்லபாய் பட்டேலின் 151வது பிறந்தநாள் தினத்தையொட்டி நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி குஜராத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

X