'11 ஆண்டுகளில் இந்தியாவின் அரசியல் கலாசாரத்தை பிரதமர் மோடி மாற்றிவிட்டார்' - ஜே.பி.நட்டா

செயல்திறன் மற்றும் நல்லாட்சியின் அரசியலை பிரதமர் மோடி தொடங்கினார் என்று ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
'11 ஆண்டுகளில் இந்தியாவின் அரசியல் கலாசாரத்தை பிரதமர் மோடி மாற்றிவிட்டார்' - ஜே.பி.நட்டா
Published on

புதுடெல்லி,

கடந்த ஆண்டு ஜூன் 9-ந்தேதி நரேந்திர மோடி 3-வது முறை இந்தியாவின் பிரதமராக பதவியேற்றார். இதன்படி இன்றைய தினம் மோடி பிரதமராக பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. அதே போல், ஒட்டுமொத்தமாக மோடி பிரதமராக பதவியேற்று 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

இந்நிலையில், 11 ஆண்டுகளில் இந்தியாவின் அரசியல் கலாசாரத்தை பிரதமர் மோடி மாற்றிவிட்டார் என மத்திய மந்திரி ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். இது குறித்து டெல்லி பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது அவர் கூறியதாவது;-

"பிரதமர் மோடி நாட்டின் அரசியல் கலாசாரத்தை மாற்றி, பொறுப்புணர்வுள்ள அரசாங்கத்தின் மூலம் செயல்திறன் மற்றும் நல்லாட்சியின் அரசியலை தொடங்கினார். அதே சமயம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி ஊழல், மோசடி மற்றும் திருப்திப்படுத்தும் அரசியலை சார்ந்து இருந்தது.

கடந்த 11 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் தலைமையில் அரசாங்கம் செய்த பணிகள் அசாதாரணமானவை. மேலும் அவை பொன் எழுத்துக்களில் எழுதப்பட வேண்டும். பிரதமர் மோடி வலுவான அரசாங்கத்தை வழங்கினார். 370-வது பிரிவு ரத்து, முத்தலாக் ஒழிப்பு, வக்பு சட்ட திருத்தம், பணமதிப்பிழப்பு, பெண்கள் இடஒதுக்கீடு மசோதா ஆகியவை அவரது அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட துணிச்சலான முடிவுகளாகும்."

இவ்வாறு ஜே.பி.நட்டா தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com