594 கி.மீ. நீளம் கொண்ட கங்கா எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி

36 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 594 கிலோ மீட்டர் தூரத்திற்கு கங்கா எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
594 கி.மீ. நீளம் கொண்ட கங்கா எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி
Published on

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தையும், பிரயாக்ராஜ் மாவட்டத்தையும் இணைக்கும் வகையில் எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. 594 கிலோ மீட்டர் நீளம் கொண்ட எக்ஸ்பிரஸ் சாலைக்கு கங்கா எக்ஸ்பிரஸ் சாலை என பெயரிடப்பட்டுள்ளது.

6 வழிச்சாலையாக அமைக்கப்பட்டுள்ள இந்த கங்கா எக்ஸ்பிரஸ் சாலையை 8 வழிச்சாலையாகவும் விரைவுபடுத்திக்கொள்ளலாம். இந்த எக்ஸ்பிரஸ் சாலை மீரட், ஹம்பூர், புலந்தசாஹர், அம்ரோஹா, சம்பல், பதாவுன், சாஜஹான்பூர், ஹர்டியொ, உன்னாவ், ரேபரேலி, பிரதாப்கர், பிரயாக்ராஜ் என மாநிலத்தின் 12 மாவட்டங்களையும் இணைக்கிறது. 36 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த எக்ஸ்பிரஸ் சாலையில் சாஜஹான்பூர் பகுதியில் அவசர காலத்தில் இந்திய விமானப்படை போர் விமானங்கள் இறங்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த எக்ஸ்பிரஸ் சாலை வாகனங்கள் அதிகபட்சமாக 120 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 36 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 594 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள கங்கா எக்ஸ்பிரஸ் சாலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்துள்ளார். மீரட் முதல் பிரயாக்ராஜ் வரையிலான இந்த எக்ஸ்பிரஸ் சாலை உத்தரபிரதேசத்தின் வளர்ச்சிக்கு மேலும் உந்துசக்தியாக இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com