குஜராத்தில் செமி கண்டக்டர் ஆலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

தொழில்நுட்பம் நாளுக்குநாள் வளர்ந்து வரும் நிலையில் செமிகண்டக்டர்கள் தேவையும் அதிகரித்து வருகிறது.
குஜராத்தில் செமி கண்டக்டர் ஆலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
Published on

அகமதாபாத்,

சிலிக்கானை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்படும் செமிகண்டக்டர்களை கொண்டு மின்சாதனங்கள், இயந்திரங்கள், வாகனங்களுக்கு தேவைப்படும் சிப்கள் (Chip) தயாரிக்கப்படுகின்றன. இந்த சிப்கள் செல்போன்கள், லேப்டாப்கள் என அன்றாட பயன்பாட்டில் உள்ள தகவல் தொடர்பு சாதனங்கள் அனைத்தும் இந்த சிப் தொழில்நுட்பத்தாலேயே இயங்குகின்றன.

தொழில்நுட்பம் நாளுக்குநாள் வளர்ந்து வரும் நிலையில் செமிகண்டக்டர்கள் தேவையும் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு நாடுகள் செமிகண்டக்டர்கள் தயாரிப்பில் முனைப்பு காட்டி வருகின்றன. அந்த வகையில் இந்தியாவிலும் செமி கண்டக்டர் ஆலைகள் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் குஜராத்தின் சனந்த் நகரில் 3 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செமிகண்டக்டர் ஆலை அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்து இருந்தது.

அந்தவகையில், குஜராத் அகமதாபாத்தில் கெய்ன்ஸ் செமிகான் செமி கண்டக்டர் ஆலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி. இந்த ஆலையில் வாகனங்கள், தொழில்துறைக்கு பயன்படுத்தும் செமி கண்டக்டர் உற்பத்தி செய்யப்படும் என தெரிகிறது. கெய்ன்ஸ் செமிகான் நிறுவனம் அமெரிக்க நிறுவனங்களுக்கு செமி கண்டக்டர் சப்ளை செய்யும் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com