காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்
Published on

புதுடெல்லி,

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2022 பர்மிங்காமில் 2022 ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறவுள்ளன. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவில் இருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் கலந்து கொள்கிறார்கள்.

இந்த நிலையில், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளவிருக்கும் இந்திய அணி வீரர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடலில் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளோடு அவர்களின் பயிற்சியாளர்களும் கலந்து கொண்டனர்.

அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-

ஜூலை 28-ம் தேதி பர்மிங்காமில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடங்குகிறது. எனவே இந்திய வீரர்கள் தங்கள் திறமையை உலகுக்கு வெளிப்படுத்த வரும் நாட்கள் முக்கியம். வீரர்கள் அனைத்து வலிமையுடனும், மன அழுத்தம் இல்லாமல் நன்றாக விளையாடுங்கள் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com