நாடாளுமன்றத்தில் போரைப்பற்றி விவாதிப்பதில் மத்திய அரசுக்கு என்ன பிரச்சினை? - ராகுல் காந்தி கேள்வி

இஸ்ரேல் - ஈரான் போரால் வர்த்தகத்தில் இந்தியா பெரிய பின்னடைவை சந்திக்கப்போகிறது என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் போரைப்பற்றி விவாதிப்பதில் மத்திய அரசுக்கு என்ன பிரச்சினை? - ராகுல் காந்தி கேள்வி
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 28-ம் தேதி முதல் பிப்ரவரி 13-ம் தேதி வரை நடைபெற்றது.

இந்தநிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கியது. ஏப்ரல் 2-ம் தேதி வரை இந்த அமர்வு நடக்கிறது.

இந்தநிலையில், இஸ்ரேல் - ஈரான் போரால் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு எரிசக்தி துறையில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ள சூழலில் அது குறித்து விவாதிக்க வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாடாளுமன்ற அவைகளிலும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்தநிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

இந்தியா பெரிய பின்னடைவை சந்திக்கப்போகிறது. ஈரான், இஸ்ரேல் போரால் வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கும். இன்று பங்குச்சந்தை நிலவரத்தை நீங்கள் பார்த்தீர்கள். பிரதமர் மோடி அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

போரைப்பற்றி விவாதிப்பதில் மத்திய அரசுக்கு என்ன பிரச்சினை? அமெரிக்காவால் பிரதமர் மோடி எப்படி சமரசம் செய்யப்படுகிறார், எப்படி மிரட்டப்படுகிறார் என்பது குறித்து விவாதம் நடைபெறும். அதனால்தான் பாஜகவினர் இதைப்பற்றி விவாதிக்க மறுக்கிறார்கள்.பிரதமர் எப்படி நாடாளுமன்றத்தைவிட்டு ஓடினார் என்பதை நீங்கள் பார்த்தீர்கள். அவரால் திரும்பி வர முடியாது"

விவாதித்தால் பிரதமர் மோடி எப்படி பிளாக்மெயில் செய்யப்படுகிறார் என பல்வேறு விஷயங்கள் வெளியே தெரிந்துவிடும் என்பதால் விவாதிக்க மறுக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com