

புதுடெல்லி,
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது 'எக்ஸ்' பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
ராமஜென்ம பூமி அறக்கட்டளை முன்னாள் பொதுச்செயலாளர் சம்பத் ராய் தலைமையில், ஏழுமலையான் கோவில், சீரடி சாய்பாபா கோவில் ஆகியவற் றில் நன்கொடை நிர்வாக முறை செயல்படுவது பற்றி ஆய்வு செய்யப்பட்ட தாக ஒரு பத்திரிகை செய்தி வெளியாகி உள்ளது.
இப்படி ஆய்வு செய்தும், ராமர் கோவிலுக்கு வெளிப்படையான நன்கொடை முறையை உருவாக்காதது ஏன்? இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
அறக்கட்டளை நிர்வாகிகள், பிரதமர் மோடியால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்கள் மக்களின் நம்பிக்கையை நொறுக்கி விட்டனர். திருட்டில் ஈடுபட்டவர்களை மோடி, அமித்ஷா, யோகி ஆதித்யநாத் ஆகிய மூவர் அணி பாதுகாப்ப துடன், அவர்களது செயல்களை மூடி மறைக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.