12 ஆண்டுகளாக தடையின்றி தொடரும் ‘மனதின் குரல்’: பிரதமர் மோடி பெருமிதம்

12 ஆண்டு கால பயணம், புனித யாத்திரைக்கு சற்றும் குறைந்தது அல்ல.
மோடி
Published on: 

புதுடெல்லி,

பிரதமர் மோடி நேற்று 'மனதின் குரல்' 139-வது நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-

12 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில், மங்களகரமான விஜயதசமி நாளில் 'மனதின் குரல்' நிகழ்ச்சியை தொடங்கினோம். அப்போதிருந்து நமது பயணம் தடையின்றி தொடர்ந்து வருகிறது.

இந்த பயணத்தில் நீங்கள் எனது சக பயணிகளாகவும், வழிகாட்டிகளாகவும் இருக்கிறீர்கள். சாமானியர்களின் கடின உழைப்பு, வீரம், உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு, சேவை உணர்வு ஆகியவற்றை பாராட்ட எனக்கு கிடைத்த ஆசீர்வதிக்கப்பட்ட தருணமாக இதை கருதுகிறேன்.

புனித யாத்திரை

என்னைப் பொறுத்தவரை, 'மனதின் குரல்' 12 ஆண்டு கால பயணம், புனித யாத்திரைக்கு சற்றும் குறைந்தது அல்ல. 12 ஆண்டுகளில், சமூகத்தால் கவனிக்கப்படாதவர்கள், தங்களது அசாதாரண பணிகளுக்காக பாராட்டுப் பெற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சி மூலமாக, நாட்டின் மக்கள் சக்தியை நான் வழிபடுகிறேன். ஒவ்வொரு குடும்பத்துடனும் இணைய இது எனக்கு வாய்ப்பு அளிக்கிறது.

'மனதின் குரல்' கேட்கும்போது, நீங்கள் எங்கள் குடும்பத்தில் ஒருவராக எங்களுடன் அமர்ந்து உரையாடுவதுபோல் இருப்பதாக எனக்கு மக்களிடம் இருந்து கடிதங்கள் வந்துள்ளன. இந்த நெருக்கமும், பாசமும்தான் எனது விலைமதிப் பில்லாத சொத்துகள்.

இவ்வாறு அவர் பேசினார்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com