

புதுடெல்லி,
மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களுக்கு பிரதமர் மோடி இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என பிரதமர் அலுவலகம் நேற்று தெரிவித்து இருந்தது.
பிரதமர் மோடி, அசாமின் சோனித்பூர் மாவட்டத்தில் தேகியாஜுலி பகுதியில் 2 மருத்துவமனைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட சாலைகளுக்கான அசோம் மாலா என்ற திட்டம் ஆகியவற்றுக்கான அடிக்கல்லை இன்று நாட்டுகிறார் என்று தெரிவித்திருந்தது.
இதேபோன்று, மேற்கு வங்காளத்தின் ஹல்டியா நகருக்கு அவர் செல்கிறார் என தெரிவித்து இருந்தது. இதன்படி, பிரதமர் மோடி, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனம் கட்டிய கியாஸ் சிலிண்டர் இறக்குமதிக்கான முனையம் ஒன்றை நாட்டுக்கு இன்று அர்ப்பணித்து உள்ளார்.
தோபி-துர்காபூர் பகுதியில் பிரதம மந்திரி உர்ஜா கங்கா திட்டத்தின் கீழ் இயற்கை வாயு பைப்லைன் பிரிவொன்றையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார். ஹல்டியா நகரின் ராணிசக் பகுதியில் நவீன 4 வழி பறக்கும் சாலை ஒன்றையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்துள்ளார்.