அடல் பூஜல் யோஜ்னா திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

நிலத்தடி நீர் மேலாண்மைக்கான அடல் பூஜல் யோஜனா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
அடல் பூஜல் யோஜ்னா திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி,

நிலத்தடி நீர் மேலாண்மைக்காக உருவாக்கப்பட்ட அடல் பூஜல் யோஜ்னா என்று பெயரிடப்பட்டுள்ள அடல் நிலத்தடி நீர் திட்டத்தை, டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.

நிலத்தடி நீர் மேலாண்மைக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டம் முதற்கட்டமாக குஜராத், அரியானா, ராஜஸ்தான், கர்நாடகம், மத்திய பிரதேசம், மராட்டியம், உத்தர பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.

7 மாநிலங்களில் உள்ள 78 மாவட்டங்களின் 8350 கிராம பஞ்சாயத்துகளில் வசிக்கும் மக்களுக்கு இந்த திட்டம் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com