இந்தியாவில் 'அனைவருக்கும் வீடு' திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

சென்னை, இந்தூர், ராஜ்கோட், ராஞ்சி, அகர்தாலா, லக்னோவில் வீட்டு வசதி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
இந்தியாவில் 'அனைவருக்கும் வீடு' திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
Published on

சென்னை,

அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின்கீழ் 2022-க்குள் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் புதிய தொழில்நுட்பத்தில் வீடு கட்டும் திட்டத்துக்காக, பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

6 மாநிலங்களில் உள்ள ஆறு நகரங்களில் சர்வதேச வீட்டுவசதித் தொழில்நுட்ப சவால் இந்தியா திட்டத்தின் கீழ் கலங்கரை விளக்கத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. பிரதமர் இன்று அடிக்கல் நாட்டி உள்ள திட்டத்தின்கீழ் தமிழகத்தில் கட்டப்படும் மொத்த குடியிருப்புகளின் எண்ணிக்கை 1, 152 ஆகும். இதன் மொத்த மதிப்பீடு ரூ.116 கோடியே 26 லட்சம் ஆகும். இதில் மத்திய அரசின் பங்கு ரூ.63 கோடியே 36 லட்சம் ஆகும். மாநில அரசின் பங்கு ரூ.35 கோடியே 62 லட்சம் ஆகும். பயனாளிகளின் பங்கீடு ரூ.17 கோடியே 28 லட்சம் ஆகும்.

அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com