செஷல்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி

இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு செஷல்ஸ்
பிரதமர் மோடி
Published on

டெல்லி,

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு செஷல்ஸ். இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடாகவும் செஷல்ஸ் திகழ்கிறது.

பிரதமர் மோடி பயணம்

இந்நிலையில், 3 நாட்கள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி இன்று செஷல்ஸ் புறப்பட்டு சென்றுள்ளார்.

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி செஷல்ஸ் புறப்பட்டு சென்றார். அந்நாட்டின் 50ம் ஆண்டு தேசிய தினம் நாளை மறுதினம் கொண்டாப்பட உள்ளது.

இந்த விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார். மேலும், செஷல்ஸ் அதிபர் பேட்ரிக்கையும் பிரதமர் மோடி சந்திக்கிறார்.

இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com