பிரதமர் மோடி - பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் சந்திப்பு

அலெக்சாண்டர் ஸ்டப் பின்லாந்து அதிபராக இந்தியாவுக்கு வருவது இதுவே முதல் முறையாகும்
பிரதமர் மோடி - பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப்  சந்திப்பு
Published on

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்ற பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் 4 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். டெல்லி பாலம் விமான நிலையத்திற்கு தனி விமானத்தில் வந்த பின்லாந்து அதிபரை, வெளியுறவுத்துறை இணை மந்திரி கீர்த்தி வர்தன் சிங் வரவேற்றார்.

இந்நிலையில், பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப், பிரதமர் மோடியுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில், இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதுவது வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அலெக்ஸாண்டர் ஸ்டப் பின்லாந்து அதிபராக இந்தியாவுக்கு வருவது இதுவே முதல் முறையாகும். இன்று மாலை ஜனாதிபதி திரவுபதி முர்முவை ராஷ்டிரபதி பவன்-இல் சந்திக்க உள்ளார்.இதையடுத்து துணைகுடியரசு தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணனையும் மரியாதை நிமித்தமாக சந்திக்கிறார். புதுடெல்லியில் இன்று மாலை நடைபெறும் ரைசினா உரையாடல் 2026 மாநாட்டில் அதிபர் ஸ்டுப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முக்கிய உரையையும் நிகழ்த்த உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com