ஆப்கானிஸ்தான் சீக்கிய-இந்துக்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு..!

பஞ்சாப் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதமர் மோடி இன்று ஆப்கானிஸ்தான் சீக்கிய -இந்துக்களுக்கு விருந்து அளித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் சீக்கிய-இந்துக்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு..!
Published on

புதுடெல்லி,

177 இடங்களை கொண்ட பஞ்சாப் சட்டசபைக்கு நாளை (பிப்ரவரி 20) ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள காங்கிரஸ் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதேவேளை, பஞ்சாபில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு பாஜக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் களத்தில் இறங்கியுள்ளன.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய பிறகு ஏற்பட்ட வன்முறையால் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு புலம்பெயர்ந்த சீக்கிய-இந்துக்களை பிரதமர் மோடி இன்று சந்தித்தார். டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் அவர்களுக்கு பிரதமர் மோடி விருந்து அளித்தார். மேலும், இந்த சந்திப்பின் போது பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பஞ்சாப் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் ஆப்கானிஸ்தான் சீக்கிய-இந்துக்களுடனான பிரதமர் மோடியின் சந்திப்பு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com