டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி

பிரார்த்தனை கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார்.
டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி
Published on: 

புதுடெல்லி,

இந்திய சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்காற்றிய தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 157-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களின் மரியாதையையும் புகழாரத்தையும் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அனைத்து சமய மக்கள் கலந்து கொண்ட சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. இந்த பிரார்த்தனை கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார்.

மகாத்மா காந்தியின் உண்மை, அமைதி மற்றும் அகிம்சை ஆகிய பண்புகளை போற்றும் வகையில் நடைபெற்ற இந்த பிரார்ததனை கூட்டத்தில் ஏராளமான பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com