விவேகானந்தர் கருத்துகள் இளைஞர்களை ஊக்குவிக்கும்: பிரதமர் மோடி

விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12 -ம் தேதி தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
விவேகானந்தர் கருத்துகள் இளைஞர்களை ஊக்குவிக்கும்: பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி,

சுவாமி விவேகானந்தரின் 161-வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. விவேகானந்தரின் பிறந்த நாளான இன்று (ஜனவரி 12 ஆம் தேதி) தேசிய இளைஞர் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாஷிக்கில் 27-வது தேசிய இளைஞர் விழாவை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இதற்கிடையே, விவேகானந்தரின் பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவின் ஆன்மிகம் மற்றும் கலாசாரங்களை உலக அரங்கில் நிலைநிறுத்தியவர் விவேகானந்தர். விவேகானந்தரின் கொள்கை உத்வேகம் மற்றும் புதிய சிந்தனைகளை கொண்டது. அவரது கருத்துகளும் கொள்கைகளும் இளைஞர்களை எப்பொழுதும் ஊக்குவிக்கும்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முன்னதாக ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்ட எக்ஸ் பதிவில், சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான இன்று பணிவுடன் அவரை வணங்குகிறேன். மிகப்பெரும் ஆன்மிக தலைவரும் சீர்திருத்தவாதியுமாக சுவாமி விவேகானந்தர் விளங்கினார். நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு நாட்டு மக்கள் தங்களின் வளமிக்க கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் அறிந்து கொள்ள வைத்தார்" என்று கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com