மாநில மொழிகளில் தீர்ப்பு: சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு பிரதமர் மோடி பாராட்டு

மாநில மொழிகளில் வழங்கப்படும் தீர்ப்பின் அவசியம் குறித்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியின் கருத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், சமீபத்தில் மும்பையில் நடந்த பார் கவுன்சில் நிகழ்ச்சியில் பேசுகையில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள் மாநில மொழிகளில் வெளியிடப்பட வேண்டும் என்று கூறினார்.

இந்தநிலையில், அவருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள் மாநில மொழிகளில் வெளியிட வேண்டியதன் அவசியத்தை பற்றி பேசியுள்ளார். அதற்காக தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளார். இது பாராட்டத்தக்க சிந்தனை. ஏராளமானோருக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு இது உதவிகரமாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

தலைமை நீதிபதி பேச்சு அடங்கிய வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com