ஆர்.ஆர்.ஆர். பட பாடலுக்கு நடனம் ஆடிய கொரிய தூதரக ஊழியர்கள் - பிரதமர் மோடி பாராட்டு

ஆர்.ஆர்.ஆர். பட பாடலுக்கு நடனம் ஆடிய கொரிய தூதரக ஊழியர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.
ஆர்.ஆர்.ஆர். பட பாடலுக்கு நடனம் ஆடிய கொரிய தூதரக ஊழியர்கள் - பிரதமர் மோடி பாராட்டு
Published on

புதுடெல்லி,

பிரபல டைரக்டர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான 'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படம் சர்வதேச அளவில் பேசுபொருளாகி உள்ளது. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள 'நாட்டு நாட்டு...' பாடல் பல விருதுகளை பெற்று வருவதுடன், அதில் இடம் பெற்ற நடனமும் சர்வதேச அளவில் கவனம் பெற்று இருக்கிறது.

இந்த புகழ் பெற்ற பாடலுக்கு டெல்லியில் உள்ள கொரியன் தூதர் சாங் ஜே-போக் மற்றும் தூதரக ஊழியர்கள் நடனமாடி உள்ளனர். படத்தில் இடம் பெற்றுள்ள நடனத்தை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் ஆடியுள்ள இந்த காட்சிகளை வீடியோ பதிவு செய்து தூதரகம் வெளியிட்டு உள்ளது.

இதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து உள்ளார். உற்சாகமூட்டும் இந்த முயற்சிக்கு வாழ்த்துகள் என தனது டுவிட்டர் தளத்தில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com