ஆக்சிஜன் ஆலைகளின் செயல்பாட்டை கண்காணிக்க நவீன தொழில்நுட்பம்: மோடி அதிரடி உத்தரவு

உள்ளூர் அளவிலும், தேசிய அளவிலும் ஆக்சிஜன் ஆலைகளின் செயல்பாட்டை கண்காணிக்க நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
ஆக்சிஜன் ஆலைகளின் செயல்பாட்டை கண்காணிக்க நவீன தொழில்நுட்பம்: மோடி அதிரடி உத்தரவு
Published on

2-வது அலை கற்றுத்தந்த பாடம்

கொரோனா வைரஸ் தொற்றின் முதல் அலையில் வெண்டிலேட்டர் தேவை மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது. இரண்டாவது அலையிலோ ஆக்சிஜன் தேவை விசுவரூபம் எடுத்தது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல இடங்களில் கொரோனா நோயாளிகள் உயிரிழக்கிற அவலம் நேரிட்டது.இந்த அலை கற்றுத்தந்த பாடத்தால் நாடு முழுவதும் ஆக்சிஜன் ஆலைகளை நிறுவ மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. பி.எம். கேர்ஸ் என்னும் பிரதமர் நிதி, பல்வேறு அமைச்சகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் சார்பில் 1,500 ஆக்சிஜன் ஆலைகளை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மோடி ஆலோசனை

இந்த சூழலில் நாட்டில் ஆக்சிஜன் வினியோகத்தை அதிகரித்தல், இருப்பை பெருக்குதல் தொடர்பாக உயர் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி பிரதமர் மோடி நேற்று ஆய்வு செய்தார்.இந்தக்கூட்டத்தில் பிரதமரின் முதன்மைச்செயலாளர் டாக்டர் பி.கே. மிஸ்ரா, மத்திய மந்திரிசபை செயலாளர் ராஜீவ் கவுபா, சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் துர்காசங்கர் மிஷ்ரா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.நாடு முழுவதும் ஆக்சிஜன் ஆலைகளை நிறுவுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பிரதமர் மோடியிடம் அதிகாரிகள் விளக்கினர்.

4 லட்சம் படுக்கைகள்

அனைத்து மாநிலங்களிலும், மாவட்டங்களிலும் ஆக்சிஜன் ஆலைகள் வந்து கொண்டிருக்கின்றன, அவை செயல்பாட்டுக்கு வந்து விடும், இவற்றின் மூலம் நாடு முழுவதும் ஆக்சிஜன் வசதி கொண்ட 4 லட்சம் படுக்கைகளுக்கு, தேவையான ஆக்சிஜனை வழங்க அவை உதவியாக இருக்கும் என பிரதமர் மோடியிடம் அதிகாரிகள் கூறினர். ஆக்சிஜன் ஆலைகளை இயக்கவும், பராமரிக்கவும் தேவயைன பயிற்சியை ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கு அளிக்க வேண்டும், ஒவ்வொரு மாவட்டத்திலும் பயிற்சி பெற்ற ஊழியர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மோடி, அதிகாரிகளுக்கு

அறிவுறுத்தினார்.இதற்காக வல்லுனர்களைக் கொண்டு ஒரு பயிற்சி தொகுதி உருவாக்கப்பட்டுள்ளதாகவும், நாடு முழுவதும் சுமார் 8 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிப்பதை அவர்கள் இலக்காகக் கெண்டுள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆலைகள் விரைவாக செயல்படுவதை உறுதிப்படுத்தவும், அதற்காக மாநில அரசுகளுடன் இணைந்து நெருக்கவும் செயல்படவும் பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

நவீன தொழில் நுட்பம்

தேசிய அளவிலும், உள்ளூர் அளவிலும் ஆக்சிஜன் ஆலைகளின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்கு ஐ.ஓ.டி. என்கிற இன்டர்நெட் ஆப் திங்க்ஸ் தொழில்நுட்பம் போன்ற நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துமாறு பிரதமர் மோடி, அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com