கேரளம் மக்களின் கனவுகளை நனவாக்குவதே என்.டி.ஏ கூட்டணியின் இலக்கு - பிரதமர் மோடி

கேரள மக்களின் ஆசியுடன் நாங்கள் இங்கு ஆட்சி அமைப்போம் என பிரதமர் மோடி கூறினார்.
கேரளம் மக்களின் கனவுகளை நனவாக்குவதே என்.டி.ஏ கூட்டணியின் இலக்கு - பிரதமர் மோடி
Published on

திருவனந்தபுரம்,

கேரளம் மாநிலத்திற்கான சட்டசபை தேர்தல் வருகிற 9-ம் தேதி நடைபெற உள்ளது. அங்குள்ள 140 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. அனைத்து தொகுதிகளையில் சேர்த்து 890 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்த தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் அடங்கிய இடதுசாரி ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆகியவை போட்டியிடுவதால் மும்முனை போட்டி நிலவுகிறது. இதனால் அங்கு அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரசாரத்தில் விறு விறுப்பாக ஈடுபட்டுள்ளனர்.

தேசிய தாஇவர்களும் பிரசாரத்ஹிற்காக கேரளம் வர தொடங்கி இருப்பதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள் அடுத்தடுத்து கேரளத்துக்கு வர உள்ளனர்.

இதில் பிரதமர் மோடி இன்று கேரளம் வந்தடைந்தார். இதற்காக அவர் விமானத்தில் வந்து பின்னர் ஹெலிகாப்டர் மூலம் பாலக்காட்டில் உள்ள மெர்சி கல்லூரி மைதானத்தில் வந்து இறங்கினார். அங்கிருந்து கொட்டா மையானத்திற்கு சென்ற அவர் அங்கு நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:-

இடதுசாரிகள் ஆளும் மாநிலங்களை போலவே, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் நிலைமை மோசமாகத்தான் உள்ளது. அண்டை மாநிலமான கர்நாடகாவி பாருங்கள். அங்கேயும் பெரும்பாலான வளர்ச்சி பணிகள் முடங்கியுள்ளன.

இமாச்சல பிரதேசமும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது. இதுதான் காங்கிரஸின் ஆட்சி மாடல், காங்கிரஸ் கூட்டணி மற்றும் கம்யூனிஸ்ட் கூட்டணியின் அனைத்து கொள்கைகளும் ஓட்டு வங்கி அரசியலுக்குக்காக மட்டுமே.

மேற்காசிய போரின் தாக்கம் இந்தியாவில் குறைவாக இருப்பதை உறுதி செய்ய மத்திய அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது. போர் நடந்து வரும் நாடுகளின் தலைவர்களுடன் தொடர்ப்பில் இருக்கிறேன். அங்கு சிக்கியுள்ள இந்தியர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

இப்படிபட்ட சூழலில் இந்த விவகாரத்தில் காங்கிரஸ் அரசியல் செய்கிறது. என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். வளைகுடா நாடுகளில் அசிக்கும் ஒரு கோடி இந்தியர்களின் உயிரை பணயம் வைத்து அதன் மூலம் அரசியல் லாபம் பெற காங்கிரஸ் முயற்சிக்கிறது.

கேரள மக்களின் ஆசியுடன் நாங்கள் இங்கு ஆட்சி அமைப்போம். கேரள மக்களின் கனவுகளை நனவாக்குவதே என்.டி.ஏ கூட்டணியின் இலக்காகும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கேரளாவுக்கு ஒதுக்கிய நிதியை தற்போது நாங்கள் 5 மடங்கு நிதி வழங்கி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com