விலைவாசி உயர்வு, விவசாயிகள் படுகொலையில் மோடி மவுனம் காப்பது ஏன்? ராகுல் காந்தி கேள்வி

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, பணவீக்கம் மற்றும் உத்தரபிரதேசத்தில் நடந்த விவசாயிகள் படுகொலை உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
விலைவாசி உயர்வு, விவசாயிகள் படுகொலையில் மோடி மவுனம் காப்பது ஏன்? ராகுல் காந்தி கேள்வி
Published on

ஆனால் இந்த பிரச்சினைகளில் பிரதமர் மோடி மவுனமாக இருப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், பிரதமர் மவுனம் - அதிகரிக்கும் பணவீக்கம், பெட்ரோல்-டீசல் விலைகள், வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் மற்றும் பா.ஜனதா தொண்டர்கள் படுகொலை. பிரதமர் ஆக்ரோஷம்-கேமரா மற்றும் புகைப்படம் இல்லாமை, உண்மையான விமர்சனங்கள் மற்றும் நண்பர்கள் பற்றிய கேள்விகள் என குறிப்பிட்டு இருந்தார்.

இதைப்போல கிழக்கு லடாக் பகுதியில் சீனா பெரிய அளவிலான ராணுவ கட்டமைப்பை செய்திருப்பதாக ராணுவ தளபதி எம்.எம்.நரவனே கூறியதை மேற்கோள்காட்டி அவர் வெளியிட்ட பதிவில், இந்திய மண்ணில் சீனர்கள் தங்கப்போகிறார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com