அமெரிக்க துணை ஜனாதிபதி குழந்தைகளுக்கு மயில் இறகுகளை பரிசளித்த பிரதமர் மோடி

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் 4 நாட்கள் பயணமாக குடும்பத்துடன் நேற்று இந்தியா வந்தார்.
அமெரிக்க துணை ஜனாதிபதி குழந்தைகளுக்கு மயில் இறகுகளை பரிசளித்த பிரதமர் மோடி
Published on

டெல்லி,

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் 4 நாட்கள் பயணமாக குடும்பத்துடன் நேற்று இந்தியா வந்தார். டெல்லி வந்தடைந்த அவருக்கு மத்திய அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர், நேற்று மாலை அவர் பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ஜே.டி.வான்ஸ் அவரது மனைவியான இந்திய வம்சாவளியை சேர்ந்த உஷா வான்ஸ், குழந்தைகள் இவான், விவேக், மிராபெல் ஆகியோரும் உடன் இருந்தனர்.

பிரதமர் மோடியும், ஜே.டி. வான்சும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, ஜே.டி.வான்சின் குழந்தைகள் பிரதமர் மோடி அருகே சென்று அவரின் மடியில் அமர்ந்துகொண்டனர். இதையடுத்து, குழந்தைகளுக்கு பிரதமர் மோடி மயில் இறகுகளை பரிசாக அளித்தார். அதை குழந்தைகள் பெற்றுக்கொண்டனர். இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com