ஐக்கிய அரபு அமீரகத்தின் மீதான தாக்குதல்களுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்

வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்களை ஈரான் தாக்கி வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் மீதான தாக்குதல்களுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்
Published on

புதுடெல்லி,

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து போர் தொடுத்து உள்ளன. இதனால் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்களை ஈரான் தாக்கி வருகிறது. அந்தவகையில் அமீரகம், கத்தார், ஈராக், குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளில் 2 நாட்களாக தீவிர தாக்குதல் நடந்து வருகிறது. இதனால் வளைகுடா பிராந்தியம் முழுவதும் பெரும் பதற்றம் நிலவுகிறது.

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் மீதான தாக்குதல்களுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் தொலைபேசியில் பேசினேன். ஐக்கிய அரபு அமீரகம் மீதான தாக்குதல்களுக்கு கடுமையான கண்டத்தை தெரிவித்துக்கொண்டேன். இந்த தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்தேன். இந்த கடினமான காலங்களில் இந்தியா ஐக்கிய அரபு அமீரகத்துடன் ஒற்றுமையாக நிற்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் இந்திய சமூகத்தை கவனித்துக்கொண்டதற்காக, ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பதற்றத்தைக் குறைத்தல், பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை நாங்கள் ஆதரிக்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com