மன் கி பாத் 104-வது நிகழ்ச்சி: பிரதமர் மோடி இன்று உரை

மன் கி பாத்தின் 104வது நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றுகிறார்
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

பிரதமர் மோடி, "மனதின் குரல்" (மன் கி பாத்) என்கிற தலைப்பில் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த உரை நிகழ்வு கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. அதன் 100வது அத்தியாயத்தை ஏப்ரல் 30, 2023 அன்று அடைந்தது. இதுவரை 103 உரைகள் முடிந்துள்ளன. கடந்த ஜூலை மாதம் 30ம் தேதி 103-வது மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.

இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 104-வது உரை ஒலிபரப்பப்பட உள்ளது. அதில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், "நாளை (இன்று) காலை 11 மணிக்கு டியூன் செய்யுங்கள். இந்தியா முழுவதிலும் இருந்து எழுச்சியூட்டும் வாழ்க்கைப் பயணங்களை முன்னிலைப்படுத்துவதில் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்" என்று அதில் பதிவிட்டிருந்தார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com