96-வது 'மன் கி பாத்' நிகழ்ச்சி: பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று உரை

96-வது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் இன்று உரையாற்றுகிறார்.
96-வது 'மன் கி பாத்' நிகழ்ச்சி: பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று உரை
Published on

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசி வருகிறார்.

அதன்படி, இந்த ஆண்டிற்கான கடைசி மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.00 மணிக்கு தொடங்குகிறது. இது 96-வது மன் கி பாத் நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியில், பரவி வரும் புதிய வகை கொரோனா மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி இதுவரை 95 மன் கி பாத் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com